திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம் ஆர் உயிரும் இரு நிலத் தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திரு அருள் பெற்றவர் அல்லால்
இம் மாதவத்தின் இயல்பு அறியாரே.

பொருள்

குரலிசை
காணொளி