திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப்
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத்
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக்
கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி