திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புறத்து உள ஆகாசம் புவனம் உலகம்
அகத்து உள ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர்ச் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே.

பொருள்

குரலிசை
காணொளி