பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய் வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி, சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர் விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?