திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.

பொருள்

குரலிசை
காணொளி