திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது,
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்க,
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி