பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும் ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர், தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம் தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!