பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர், எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ! பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான், கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே!