திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: செவ்வழி

வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே

பொருள்

குரலிசை
காணொளி