பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப் பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்; ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம் பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.