திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே!

பொருள்

குரலிசை
காணொளி