இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து
அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு
சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!