மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று, காள
காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று,
பிச்சை
ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை
நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே!