துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர் நக்க(அ)ரையர்
அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள்
பெறுவீர்
கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே!