நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து,
அங்கு
அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி, நல்ல
இச்சை பகர்ந்து, “மிக இடுமின், பலி!” என்று, நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே!