திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள
படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை
நூல்
உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை
என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே!

பொருள்

குரலிசை
காணொளி