மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில்
வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.