திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம்
இறையே.

பொருள்

குரலிசை
காணொளி