திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு
ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.

பொருள்

குரலிசை
காணொளி