பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன்
வாழும்
அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்
கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!