குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்து
அகத்தும்,
இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்!
சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!