திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே?
குளிர்பொய்கைத்
துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்!
கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல்
ஆமே?

பொருள்

குரலிசை
காணொளி