திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்!
“ஒரு அடியாள் இரந்தாள்” என்று, ஒரு நாள் சென்று,
உரையீரே!
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?

பொருள்

குரலிசை
காணொளி