நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம்
அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல்
அழகியதே?
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு
நலமே?