திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின்
பால்
பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி
“ஆத்தம்” என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று
உரைத்த,
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே.

பொருள்

குரலிசை
காணொளி