பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும், இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்; வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்- திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.