கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன்
துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.