திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு
அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம்
செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர்
சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்
தானே.

பொருள்

குரலிசை
காணொளி