கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமளமாது உமையாள
பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு
அணிந்து,
சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல்
கொண்டார் தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்
தானே.