திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

“வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை”
என
உள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன்
உரம் நெரிய,
மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும்
இடம்போலும்
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி