வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல்
அயனும்,
பல் பறவைப்படி ஆய் உயர்ந்தும், பன்றி அது ஆய்ப்
பணிந்தும்,
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர்
இடம்போலும்
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம்
தானே.