திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது
உறலும்,
சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர்,
சில்பலிக்கு என்று,
ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு
இடம்போலும்
துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி