குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்,
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய்
மடிய,
இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார்
இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம்
தானே.