பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத் துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும் வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.