“கழி உளார்” எனவும், “கடல் உளார்” எனவும், “காட்டு
உளார்:, நாட்டு உளார்” எனவும்,
“வழி உளார்” எனவும், “மலை உளார்” எனவும், “மண்
உளார்”, “விண் உளார்” எனவும்,
“சுழி உளார்” எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர்
வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.