திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால்,
இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி, “ஆற்றலோம்” என்ன, சரண் கொடுத்து,
அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

பொருள்

குரலிசை
காணொளி