திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

“காட்டினார்” எனவும், “நாட்டினார்” எனவும், “கடுந் தொழில்
காலனைக் காலால்
வீட்டினார்” எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி
சடைமேல்
சூட்டினார்” எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள
சொல்லும் நால்வேதப்-
பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

பொருள்

குரலிசை
காணொளி