“ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க!” எனவும்
“உமையவள் கணவன் வாழ்க!” எனவும்,
அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி
இணை தொழவே,
நண்பினார் எல்லாம், “நல்லர்!” என்று ஏத்த, அல்லவர்,
“தீயர்!” என்று ஏத்தும்
பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.