எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான்
உலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி
இணை சேர்வான்,
முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும்
பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.