ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல்
அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும்,
அரக்கன்
வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு
நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.