திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர்
பூணநூல் புரள,
மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு
வெண்நீறு மெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை
ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

பொருள்

குரலிசை
காணொளி