பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன் வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ, காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.