பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை; புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை; துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.