பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண் தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில் வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.