பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்; பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்; சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.