பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கடகரி உரியர் போலும்; கனல் மழுவாளர் போலும்; பட அரவு அரையர் போலும்; பாரிடம் பலவும் கூடிக் குடம் உடை முழவம் ஆர்ப்ப, கூளிகள் பாட, நாளும் நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே.