பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்; வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப் பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்; நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே.