பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்; செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்; “எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே!” என்று தம்மை நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.