பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும் கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே.