பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த
பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது
ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை,
மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.